 
            திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் நவம்பர் 01ந் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ஏனெனில் கனமழை காரணமாக கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமாகவும், ஊத்துக்கோட்டை மற்றும் ஆவடி இரண்டு பகுதிகளிலும் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் சராசரியாக 62 -70மிமீ மழை இருந்தது. மொத்தமாக மாவட்டத்தின் சராசரியாக மழை 7.5 சென்டிமீட்டராக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 167 செமீ மழை பதிவாகியது. இதனால், ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான தண்டலம், பாலவாக்கம், பெரியபாளையம், தாமரைப்பாக்கம், வெங்கல் ஆகிய பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியது.

இதற்கு முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களோடு காணொளி மூலமாக ஆய்வு நடத்தினார். அப்போது ஒவ்வொரு துறையையும் எவ்வாறு ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் என்று அணைத்து ஆட்சியர்களுக்கு அனைத்து அறிவுரைகளையும் கூறினார்.
அதேபோன்று, இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கிறது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் அக்டோபர் 22-ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 01ந் தேதி அனைத்து பள்ளிகளும் முழுநாள் செயல்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.