SIR-க்கு எதிராக தவெகவின் தீர்மானம்… சிறப்புக் கூட்டத்தில் உறுதியான முடிவு…!!!
SeithiSolai Tamil November 05, 2025 06:48 PM

தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்புப் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், மிக முக்கியமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, அதை நிறைவேற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த சிறப்புத் திருத்தப் பணி குறித்த அறிவிப்பால், வாக்காளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் எழுந்துள்ள நிலையில், தவெகவும் இந்தக் கவலைகளுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று அந்தக் கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்த அறிவிப்பு, மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகளைக் குறி வைக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன.

அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தச் சிறப்பு தீவிர திருத்தம் என்ற குழப்பத்தை விடுத்து, ஏற்கெனவே இருக்கும் நடைமுறையையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில், மக்களின் உரிமையைக் காப்பதற்காக அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி அனைத்துக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைய வேண்டும் என்றும் தவெக வலியுறுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.