கோவை விமான நிலையம் பின்புறம் தனிமையான பகுதியில், நவம்பர் 1 இரவு (2025) மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரி மாணவி, தனது நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தபோது மூன்று இளைஞர்கள் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து குற்றவாளிகள் குணா (30), சதீஷ் (20), கார்த்திக் (21) ஆகிய மூவரையும் கோவை போலீஸ் அதிரடியாக கைது செய்தது. இவர்களுக்கு மீது முன்பும் பல குற்ற வழக்குகள் இருப்பதாக போலீஸ் தெரிவித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அறிக்கையில், “மாணவியின் நண்பர் இரவு 11:20 மணிக்கு காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார், ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி அதிகாலை 4 மணிக்கு தான் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த 4 மணி நேரம் 25 நிமிடங்களில் காவல்துறை என்ன செய்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும், “100 போலீசாரை இணைத்து தேடுதல் நடவடிக்கை நடத்தியதாக காவல் ஆணையர் கூறியுள்ளார். ஆனால் சம்பவ இடத்திலேயே இருந்த மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடாகும். முதலில் ‘சிறிய சுவர்’ எனவும் பின்னர் ‘பெரிய சுவர்’ எனவும் விளக்கம் மாறிய காவல் ஆணையரின் பதில் நம்பகமற்றது. திமுக அரசு மற்றும் அதன் காவல்துறை தங்களின் திறமையின்மையை மறைக்க முடியாது,” எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும், குற்றப்பத்திரிகை ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். ஆனால் அதற்கு முன் காவல்துறையின் செயலிழப்பை விளக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!