வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாகவும், இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் பலவீனமடையக்கூடும் எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.
தமிழக உள்பகுதிகள் மீது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால், இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பதிவு ஆக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கனமழை ஏற்படக்கூடிய மாவட்டங்கள்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்கள்.
மேலும் நாளை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை துறை தெரிவித்துள்ளது.

வானிலை மாறுபாட்டை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வானிலை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?