மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை 14வது ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை நடைபெற உள்ளது. இந்த சர்வதேச போட்டியில் மொத்தம் 24 அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிந்து மோதவுள்ளன. மதுரை மற்றும் சென்னை ஆகிய இரண்டு நகரங்களில் மொத்தம் 72 போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் ஒளி, ஒலி, இருக்கை வசதிகள், குடிநீர், கழிவறை, அவசர மருத்துவ சேவை, பாதுகாப்பு மற்றும் கேமரா கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட வேண்டும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்ததாவது: “இந்த முறை ஒலிம்பிக் தரத்திலான ஊதா நிற டர்ஃப் கொண்ட புதிய ஹாக்கி மைதானம் உருவாக்கப்படுகிறது. இது வீரர்களுக்கான விளையாட்டு வசதியை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பந்து தெளிவாகத் தெரியும், வீரர்களுக்கு கால்வலி குறையும். இதன் மூலம் போட்டிகள் சிறப்பாக நடைபெறும்,” என்றார். மதுரையில் நடைபெறவுள்ள இந்த ஹாக்கி உலகக்கோப்பை குறித்து விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!