அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற 280-வது லாட்டரி குலுக்கலில், சென்னையைச் சேர்ந்த மின்னியல் பொறியாளர் சரவணன் வெங்கடாசலம் (வயது 44) ரூ.60.37 கோடி மதிப்பிலான பரிசு தொகையை வென்றுள்ளார். அமீரகத்தில் வேலை பார்த்து வந்த அவர் வாங்கிய 463221 என்ற டிக்கெட் இந்த அதிர்ஷ்ட பரிசை பெற்றுக் கொடுத்தது.

500 திர்ஹாம் மதிப்புள்ள இந்த லாட்டரி டிக்கெட்டை விமான நிலைய கடைகளிலும் இணையத்திலும் வாங்கலாம். அதிக பரிசுத்தொகை காரணமாக அமீரகத்துடன் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளவர்கள் கூட இதில் பங்கேற்கின்றனர். அண்மையில் ‘ஒரு டிக்கெட் வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சலுகை திட்டத்தின் மூலம் சரவணன் தனது டிக்கெட்டை வாங்கியதாக கூறப்படுகிறது.
பரிசு அறிவிப்பு வெளியானபோது தன்னுடைய பெயரைப் பார்த்து நம்ப முடியாமல் போயிற்று என சரவணன் தெரிவித்தார். “முதலில் இது எனக்கே வந்ததா என்று சரிபார்த்தேன். பின்னரே நிறுவனத்துடன் பேசினேன். இந்த பரிசுத் தொகையை முக்கியமாக என் இரண்டு குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்த திட்டம் போட்டுள்ளேன்” என அவர் கூறினார்.

2019-ல் அமீரகத்துக்கு வந்த சரவணன், அதற்கு முன்பு கத்தார், குவைத், ஓமான் நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த வெற்றி தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என அவர் ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?