மூச்சுத்திணறல், துர்நாற்றம்... மணலி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் பரபரப்பு!
Dinamaalai November 06, 2025 04:48 AM

சென்னை மணலி பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உர தொழிற்சாலையில் நேற்று இரவு அமோனியா வாயு கசிந்ததால் பொதுமக்கள் கடும் அச்சத்திலும் அவதியிலும் மூழ்கினர். திடீரென காற்றில் பரவிய அமோனியா துர்நாற்றத்தால் மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகளை எதிர்கொண்டனர்.

ரவுண்டானா சாலையில் வாகனங்களில் சென்றவர்கள், முகத்தில் துணி கட்டிகொண்டு அவசரமாகப் பாதையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வந்த போக்குவரத்து போலீசாருக்கே நாற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அவர்கள் துணியால் முகத்தை மூடி பணியைத் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் பற்றி அறிந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக தகவல் சேகரித்தனர். தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் அமோனியா பைப்பில் கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக புகை போக்கி மூலம் வாயு அதிகளவில் வெளியில் கலந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நாற்றம் நீடித்ததால் சுற்றுப்புற மக்கள் கவலையடைந்தனர்.

சம்பவத்தால் மணலி பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொழிற்சாலையிடம் இருந்து விபத்து தொடர்பான விளக்கமும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் கேட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுப்புற குடியிருப்புகள் பாதுகாப்பு தரநிலைகள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், தொழிற்சாலையின் வாயு கண்காணிப்பு அமைப்புகள் குறித்து மேலும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.