சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற தம்பதியிடம் புலி பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இருவரும் உயிர் தப்பி தப்பியோடியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன. தண்ணீர் மற்றும் உணவு தேடி யானை, சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் சில நேரங்களில் வனப்பகுதியில் இருந்து திண்டுக்கல்–மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று பண்ணாரி - திம்பம் சாலையில் புலி ஒன்று சாலையோரம் அமர்ந்திருந்தது.

அப்போது திம்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதி அங்கு வந்து கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக அந்த புலி நேரடியாக அவர்களை நோக்கி பாய்ந்தது. பைக்கில் அமர்ந்திருந்த பெண் அதிர்ச்சியடைந்து உடனே கீழே இறங்க, இருவரும் அலறியபடி அங்கிருந்து நழுவி தப்பினர். தம்பதியின் கத்தலை கேட்ட புலி மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அந்த தருணத்தை அருகில் சென்ற பயணி ஒருவர் கைபேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் யானை, சிறுத்தை போன்ற விலங்குகள் பொதுவாகக் காணப்பட்டாலும், புலி இவ்வாறு சாலை ஓரமாக பாய்ந்தது பயணிகளிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

வனத்துறையினர் புலியின் நகர்வை கண்காணித்து வருவதாகவும், வனப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?