வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!
Top Tamil News November 06, 2025 07:48 AM

கிழக்காசிய நாடான வடகொரியாவில், 1998 முதல் 2019 வரை வடகொரிய மக்கள் சபையின் தலைவராக இருந்தவர் கிம் யோங் நம்.இது, அந்நாட்டின் கவுரவ அதிபர் பதவி போன்றது. கடந்த 2019ல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற கிம் யோங் நம்மிற்கு புற்றுநோய் ஏற்பட்டது.இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்தார். 

கிம் யோங் நாம் திங்கட்கிழமை (நவம்பர் 3) காலமான தகவலை அரசாங்க ஊடகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. நாட்டின் சடங்குபூர்வத் தலைவராக அவர் பொறுப்பு வகித்திருக்கிறார். 1998ஆம் ஆண்டு பொறுப்புக்கு வந்த அவர், 2019ல் பதவி விலகினார்.

வடகொரியாவின் உச்ச மக்கள் மன்ற நிர்வாகக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்துள்ளார் திரு கிம் யோங் நாம். நாட்டின் தலைவர்கள் மூவருடனும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டது.

திரு கிம் யோங் நாமின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்த வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் நேரில் சென்றிருந்ததாக அரசாங்க ஊடகம் குறிப்பிட்டது.

திரு கிம் யோங் நாம் வடகொரியாவுக்கு ஆற்றிய பங்கு பெரும்பாலும் சடங்குபூர்வமானது என்றாலும் வடகொரியாவின் அரசதந்திரிகளிடமும் வெளியுறவுத் துறையினரிடமும் அவருக்கு அதிக செல்வாக்கு இருந்ததாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.