சின்னத்திரை நடிகைக்கு சமூக வலைத்தளத்தில் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பெங்களூரு நகரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான நடிகை, கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ‘நவீன்ஸ்’ என்ற முகநூல் கணக்கு மூலம் நண்பர் கோரிக்கை வைத்த நபர், நடிகை அதை ஏற்காததால், மெசஞ்சர் வழியாக தொடர்பு கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஆபாச தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி நடிகைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.

நடிகை முதலில் கண்டித்தபோதும் அந்த நபர் தொடர்ந்து மற்றொரு கணக்கின் மூலமும் ஆபாசப் படங்கள், வீடியோக்களை அனுப்பியுள்ளார். சுமார் மூன்று மாதங்கள் நீண்ட இந்த தொல்லையால் மன உளைச்சலுக்கு உள்ளான நடிகை, நவம்பர் 1ஆம் தேதி அந்த நபரை சந்தித்து கண்டித்ததாக தகவல். அதற்குப் பின்னரும் அவர் தொல்லை நிறுத்தாத நிலையில், நடிகை அன்னபூர்ணேஷ்வரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில் குற்றச்செயலில் ஈடுபட்டவர் பெங்களூருவைச் சேர்ந்த நவீன் (41) என்பதும், பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்துவருபவரும் என போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினர் அவரை கைது செய்து, பி.என்.எஸ் சட்டப்பிரிவுகள் 75(1)(3), 78(1)(3) மற்றும் 79ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண்களுக்கு ஆன்லைன் வழியாக நடைபெறும் தொல்லை அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய புகார்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் கூறினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?