சமீபமாக விவாதத்தை கிளப்பிய சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் – ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட தகராறு மீண்டும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. ஜாய் கிரிசில்டா, ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தன் குழந்தை ரங்கராஜுக்கே சொந்தம் என நிரூபித்ததாகவும் நேற்று சமூக வலைதளத்தில் கூறியிருந்தார்.
ஆனால் இன்று ரங்கராஜ் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜாய்யை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக நான் ஒருபோதும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
View this post on InstagramA post shared by T.P.Rangharaaj (@madhampatty_rangaraj)
மேலும், “என்னை அவதூறு செய்ய தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டியதால், அந்த திருமணம் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், பணம் பறிக்கும் நோக்கத்தோடு இது நடந்ததாகவும் ரங்கராஜ் விளக்கமளித்துள்ளார். ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதற்கான வாக்குமூலங்களை ஏற்கனவே அளித்துள்ளதாகவும் கூறினார்.
ஜாய் மாதத்திற்கு ₹1.5 லட்சம் பராமரிப்பு தொகையும், BMW கார் EMIக்காக ₹1.25 லட்சமும் கேட்டதாகவும், தாம் அதை நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, குழந்தை தன்னுடையது என நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்பேன் என்றும் ரங்கராஜ் தெரிவித்தார்.

மகளிர் ஆணையம் வெளியிட்ட பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளவையும் தாம் கூறியவை அல்ல என விளக்கம் அளித்த அவர், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறினார். இந்த விவகாரம் தினந்தோறும் புதிய திருப்பங்களை எடுத்து வரும் நிலையில், இருவரும் முன்வந்த குற்றச்சாட்டுகள் பொது வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. எனினும் உண்மை நீதிமன்றத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?