சென்னை சென்ட்ரலில் டிக்கெட் எடுப்பதற்கான புதிய மொபைல் வசதி தொடக்கம்!
Dinamaalai November 05, 2025 10:48 PM

சென்னையின் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவில்லா டிக்கெட்டுகளை மொபைல் சாதனத்தின் மூலம் உடனடியாக பெற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ரெயில்வே நிர்வாகம் நியமித்துள்ள ‘எம்-யுடிஎஸ் உதவியாளர்’ எனப்படும் பணியாளர்கள் கையடக்க யூடிஎஸ் (Unreserved Ticketing System) சாதனமும் அச்சுப்பொறியும் பயன்படுத்தி பயணிகளுக்குத் டிக்கெட்டுகளை வழங்குவார்கள். இதன் மூலம் வழக்கமான டிக்கெட் கவுண்டர்களில் காணப்படும் நெரிசலைக் குறைத்து, விரைவான சேவையை வழங்க முடிகிறது.

இந்த முறையில் சாதாரண பயண டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் எளிதாக பெறலாம். ஆனால், முன்பதிவு செய்யப்பட்ட அல்லது சலுகை டிக்கெட்டுகள் இவ்வசதியால் வழங்கப்படமாட்டாது.

இந்த புதிய ‘மொபைல் டிக்கெட்’ திட்டம் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நிலையங்களில் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், சென்னையில் முதலில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விரைவில் எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களிலும் இதே வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனவும் அவர்கள் கூறினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.