நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பெங்களூரிலிருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தும், பலர் காயமடைந்தும் உள்ளனர்.

சேலம்–கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற பேருந்து, அதிகாலை 3 மணியளவில் பரமத்தி அருகே ராசாம்பாளையம் டோல் பிளாசாவை கடந்தபின் கிராமுடு அருகே வந்தது. அப்போது அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால், வாகனங்கள் மாற்றுச் சாலையில் திருப்பி விடப்பட்டன. இந்த நிலையில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

பேருந்தில் டிரைவர் உட்பட 18 பேர் பயணம் செய்திருந்தனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; அவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 7 பேர் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!