விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தையை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அது நிகழ்விடத்திலேயே பலியானது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். பின்னர் சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில், விக்கிரவாண்டி பகுதியில் இதுவரை சிறுத்தை நடமாட்டம் பதிவாகாத நிலையில், திடீரென சாலையில் தோன்றி விபத்துக்குள்ளாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை எந்தப் பகுதியில் இருந்து வந்தது, வழித்தவறி வந்ததா என்பதை வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!