KrantiGoud: 8-ஆம் வகுப்புடன் நின்ற படிப்பு… இன்று உலகக் கோப்பை நாயகி…. வறுமையில் பூத்த வைரம்….!!
SeithiSolai Tamil November 05, 2025 09:48 PM

கிரிக்கெட் வீராங்கனை கிராந்தி கௌட் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். அவர் ஏழு பிள்ளைகளில் இளையவர். அவரது தந்தை காவலராக இருந்து வேலையை இழந்த பிறகு, குடும்பம் மேலும் கஷ்டப்பட்டது. இதனால் கிராந்தி தனது பள்ளிப் படிப்பை 8-ஆம் வகுப்போடு நிறுத்த வேண்டியிருந்தது. அவரது சகோதரர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தனர், ஆனால் கிராந்தி முழு கவனத்தையும் கிரிக்கெட்டில் செலுத்தினார்.

ஒருமுறை சாதாரணமாக நடந்த டென்னிஸ் போட்டியில், ஆட்கள் இல்லாத ஒரு அணிக்காக கிராந்தி விளையாடினார். அங்கு அவர் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு ஆட்ட நாயகி விருதையும் பெற்றார். இந்த ஆட்டத்தைப் பார்த்த பயிற்சியாளர் ராஜீவ் பில்த்ரே, அவரது திறமையை உணர்ந்து அவருக்குச் சரியான பயிற்சி அளித்தார். இதன் மூலம் அவர் தோல் பந்து கிரிக்கெட்டுக்கு வந்தார்.

பயிற்சியாளர் உதவியுடன், கிராந்தி மத்தியப் பிரதேசம் மாநில அணிக்காக விளையாடினார். 2024-ல் மாநிலத்தின் முதல் ஒருநாள் கோப்பை வெற்றியில் அவர் முக்கியப் பங்காற்றினார். இதன் பிறகு, அவர் WPL தொடரில் UP வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். அவரது சிறப்பான பந்துவீச்சால் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டு, இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வெல்வதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.