நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் கடந்த 05-ம் தேதி நவம்பர் மாதம் 2010-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் உத்தமபுத்திரன். இந்தப் படத்தை இயக்குநர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு கதையை கோபிமோகன மற்றும் கோனா வெங்கட் ஆகிய இருவரும் இணைந்து எழுதி இருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஜெனிலியா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விவேக், கே. பாக்யராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெய பிரகாஷ் ரெட்டி, சுந்தர்ராஜன், கருணாஸ், விஜய் பாபு, விவேக்வாசு நாகல்லா, சாருஹாசன், மயில்சாமி, ஸ்ரீநாத், ராஜேந்திரன், அம்பிகா, ரேகா, ராஜ்யலட்சுமி, நித்யா, உமா, ஆர்த்தி, சோனியா, பாண்டு, மாஸ்டர் பரத், சுரேகா ரஜ்ய சன்னி, ரவிராஜ், ராஜேஷ் லிங்கம், ஷ்ரியா சரண் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பாலாஜி ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எம். மோகன் அப்பாராவ் மற்றும் டி. ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
15 ஆண்டுகளை நிறைவு செய்தது உத்தமபுத்திரன் படம்:ஆண்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும் பெண்கள் என்றால் வீட்டில் அடிமைகள் மாதிரி வேலைமட்டுமே செய்ய வேண்டும் என்று பின்னோக்கிய மனநிலை உடைய தாய்மாகன்களை கொண்டுள்ளார் நடிகை ஜெனிலியா. எதிர்பாராத விதமாக அமெரிக்காவில் தனது தந்தை தாய் இருவரும் உயிரிழந்துவிட தனது மாமாக்களின் ஊருக்கு வருகிறார்.
Also Read… ’டிஎன்ஏவில் நிரூபிக்கப்பட்டால் குழந்தையை கவனிப்பேன்’ – மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பரபர அறிக்கை!
அங்கு ஜெனிலியாவின் தந்தையின் சொத்துக்கு ஆசைப்பட்ட தாய் மாமன்கள் இருவரும் தங்களது மகனுக்கு ஜெனிலியாவை திருமணம் செய்துவைத்து சொத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த திருமணத்தில் இருந்து தப்பிய ஜெனிலியா தனுஷை சந்திக்கிறார். இருவரும் காதலில் விழுகிறார்கள். இந்த பிரச்னைகள் அனைத்தையும் சரி செய்து தனுஷ் ஜெனிலியா உடன் எப்படி சேர்கிறார் என்பதே படத்தின் கதை.
Also Read… மாயாஜாலம் கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ்… சரத்குமார் பாராட்டு