நடிகை த்ரிஷா வீட்டில் பரபரப்பு... மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
Dinamaalai November 10, 2025 04:48 PM

 

நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் தொடர் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இன்று காலை சென்னை டி.ஜி.பி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், நடிகை திரிஷா வசிக்கும் ஆழ்வார்பேட்டை வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே போலீசார் அலர்டாகி, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் திரிஷா வீடும் சுற்றுப்புறங்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்டன. நீண்ட நேரம் நடைபெற்ற சோதனையில் எந்தவித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படாததால், இது வெறும் மிரட்டல் மின்னஞ்சலாக இருப்பது உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்பு நான்கு முறை இதேபோல் திரிஷா வீட்டிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இதேபோல் மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதால், அதை அனுப்பிய நபரை கண்டறிய தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.