சென்னையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சென்னையில் உள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் (Chennai Chepauk Stadium) டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது. கடைசியாக, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி இங்கிலாந்து மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில், இங்கிலாந்து மகளிர் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தியது.
அரையிறுதி போட்டிகள் எங்கே நடைபெறும்..?CHEPAUK IS GETTING READY FOR T20I WC & IPL 2026. 💛
– One of the best stadiums in India. pic.twitter.com/Q8JHJwPaqA
— Johns. (@CricCrazyJohns)
2026 டி20 உலகக் கோப்பையில் லீக் ஸ்டேஜ் போட்டிகளின் ஒரு சில போட்டிகள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறலாம். அதேநேரத்தில், ஈடன் கார்டன்ஸ் 2026 டி20 உலகக் கோப்பையின் ஒரு அரையிறுதிப் போட்டி ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் அரையிறுதி ஸ்டேடியத்திலும், மற்றொரு அரையிறுதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
ALSO READ: மகளிர் உலகக் கோப்பையில் இனி 10 அணிகள்.. எண்ணிக்கையை அதிகரித்த ஐசிசி!
இந்தியாவும் இலங்கையும் இணைந்து வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை நடத்துகின்றன. உலக கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் ஐ.சி.சி, உலகக் கோப்பையை நடத்த மொத்தம் 8 இடங்களை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் மொத்தம் 5 நகரங்களில் நடத்தலாம். கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, புது தில்லி மற்றும் சென்னையில் போட்டிகளை நடத்தலாம். இலங்கையில் 3 மைதானங்களில் போட்டிகளை நடத்தலாம். அப்படி இல்லையென்றால், கொழும்பு மற்றும் கண்டி என 2 ஸ்டேடியங்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும், 2026 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், போட்டி பெரும்பாலும் கொழும்பு ஸ்டேடியத்தில் நடைபெறும். இருப்பினும், வேறு எந்த இரண்டு நாடுகளும் இறுதிப் போட்டியில் விளையாடினால், அது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இருக்க வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றால் என்ன நடக்கும்?இலங்கை அல்லது பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், போட்டி கொழும்பில் நடைபெறும். இல்லையெனில், 2 அரையிறுதிப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும். அரையிறுதிக்குத் தகுதி பெறும் நான்கு அணிகள் உறுதி செய்யப்பட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.
கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதி ஐ.சி.சி உலகக் கோப்பை 20 அணிகள் பங்கேற்கும் போட்டியாக இருக்கும் என்று ஐசிசி அறிவித்தது. அடுத்த 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை 2026ம் ஆண்டு பிப்ரவரி 7 முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும். இறுதிப் போட்டியானது 2025 மார்ச் 8ம் தேதி நடைபெறும். இறுதிப் போட்டி நடைபெறும் இடமும் நடைமுறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செய்தி நிறுவனமான பிடிஐ படி, ஐசிசி வருகின்ற 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதிக்குள் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். பெரும்பாலான அணிகள் குழு ஏற்பாடு மற்றும் அட்டவணை குறித்து காத்திருக்கின்றன. இது தவிர, டிக்கெட்டுகள் குறித்து ஐசிசி இன்னும் எதையும் அறிவிக்கவில்லை.
ALSO READ: 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை.. போட்டிகளுக்காக 5 மைதானங்கள் தேர்வு..
அரையிறுதிக்கு அணிகள் எப்படி தகுதி பெறும்..?2026 டி20 உலகக் கோப்பை 2024 டி20 உலகக் கோப்பையைப் போலவே நடைபெறும். இதில் 20 நாடுகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அணிகள் இருக்கும். குழுவில் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் எட்டுக்கு முன்னேறும். அங்கும், எட்டு அணிகள் இரண்டு குழுக்களாக இடம் பெறும். ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் இருக்கும். அங்கிருந்து, முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.