ஜேசன் சஞ்சய் இயக்கி, இளம் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் புதிய ஆக்ஷன் திரைப்படத்தின் 'டைட்டில்' இன்று காலை வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்புக் குழுவினர் தங்கள் சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் ’டைட்டில்’ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில், இந்த படத்திற்கு "சிக்மா" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். எஸ்.தமன் இசையை மேற்கொள்கிறார். பணத்தை மையமாக வைத்து ஆக்சன் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.