திருப்பதி ஏழுமலையின் அடிவாரமான அலிபிரி பகுதியில் தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த இரு ஊழியர்கள் அசைவ உணவு சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து திருமலை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் தேவஸ்தான நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், YSR காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்ட வீடியோவில் அசைவ உணவு சம்பவம் உறுதியானதாக கூறப்பட்டதால், அலிபிரி அருகே அசைவ உணவு உட்கொண்டதாகக் கூறப்படும் ராமசாமி மற்றும் சரசம்மா என்ற இரு ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

திருமலையில் அசைவ உணவு கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை எடுத்தது. மேலும், இருவர்மீதும் ஆந்திரப் பிரதேச அறநிலையச் சட்டம் பிரிவு 114ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!