திருச்சி பீமநகர் கீழத்தெருவைச் சேர்ந்த தாமரைசெல்வன் (24), தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இன்று காலை மார்சிங்பேட்டை வழியாக வேலைக்குச் செல்லும் போது, இரு இருசக்கர வாகனங்களில் வந்த நால்வர் கொண்ட கும்பல் திடீரென அவரை வழிமறித்து தாக்கினர். நிலை தடுமாறி விழுந்த தாமரைசெல்வனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல், அவர் உயிர் தப்பி ஓடியபோதும் பின் தொடர்ந்தனர்.

அருகிலிருந்த காவலர் குடியிருப்புக்குள் புகுந்து தஞ்சம் அடைந்த தாமரைசெல்வனை கும்பல் துரத்தி சென்று, சமையலறை வரை பின்தொடர்ந்து கொலை செய்தது கொடூரத்தைக் கிளப்பியது. அந்த நேரத்தில் காவலர் செல்வராஜ் வீட்டில் இருந்தபோது சம்பவம் நடந்தது. தகவல் அறிந்த திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர் சிபின், மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், சில மணி நேரங்களிலேயே போலீசார் சதீஷ், பிரகாகரன், நந்து, கணேசன் ஆகியோரை கைது செய்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்த தாமரைசெல்வனுக்கும் சதீஷுக்கும் இடையே ஏற்பட்ட தகராறே கொலையின் காரணம் என கூறப்படுகிறது. தகராறில் பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!