கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் நேற்று இரவு நடந்த துயரமான விபத்து அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அங்குள்ள வாட்டர் வாஷ் கடையில் வேலை பார்த்த தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் தியாகதுருகம் கரிம் ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த ஷாகில் ஆகியோர், வழக்கம்போல் கடையில் பணியில் இருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி இருவரும் மயங்கினர். அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இருவரும் இன்று அதிகாலை உயிரிழந்தனர். இளம் வயதில் உயிரிழந்த அரவிந்த் மற்றும் ஷாகிலின் மரணம், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தியாகதுருகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!