காஜியாபாத் நகரில் உள்ள சாஸ்திரி நகர் மதுக் கடை ஒன்றின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசிய அறையில் கள்ள மது தயாரிப்பு கும்பலைப் போலீசார் பிடித்து கைது செய்தனர். அங்கிருந்து போலியான மது பாட்டில்கள், மூடிகள், லேபிள்கள், காலி பேக்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சண்டிகரில் இருந்து காலி பாட்டில்கள், மீரட் பகுதியில் இருந்து போலி மூடிகள் வரவழைத்து, பிரபல பிராண்டுகளின் நகல் மதுப் பாட்டில்களை தயாரித்து வந்ததாக போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் பின்னர், பொதுமக்கள் வாங்கும் மதுப் பாட்டில்கள் உண்மையா அல்லது போலியா என்பது குறித்த சந்தேகம் பெருகியுள்ளது. அதனை அடையாளம் காண சில வழிமுறைகளை வல்லுநர்கள் விளக்குகின்றனர்.

பேக்கிங் மற்றும் அச்சில் வேறுபாடு கவனிக்க:
உண்மையான பிராண்டு பாட்டில்களில் தெளிவான அச்சு, சரியான கலர், பாட்டில் மூடியின் தொப்பி சீல் மற்றும் ஸ்பெல்லிங் சரியாக இருக்கும்
லேபிள் மங்கலாக இருந்தால், நிறம் மங்கலாக இருந்தால், எழுத்துப் பிழை இருந்தால், அது ஒரிஜினலா போலியா என்கிற சந்தேகம் கொள்ள வேண்டும்
மூடி மற்றும் சீல் சரிபார்க்க:
தொழிற்சாலையில் தயாரித்த உண்மையான மூடி, பாட்டிலுக்கு நெருக்கமாக பொருந்தும். தளர்வான மூடி அல்லது சரியாக பொருந்தாத சீல் போன்றவை போலியான ஒயின் பாட்டிலுக்கான முக்கிய அறிகுறி
பாட்டிலின் கண்ணாடி தரம்:
உண்மையான பாட்டில்களின் அடியில் அல்லது பக்கத்தில் பிராண்டு முத்திரை அல்லது சிறப்பு குறியீடு இருக்கும்
போலிப் பாட்டில்களில் இவை காணப்படாது.
கதிர்வளம், நிறம், நுரை பரிசோதனை:
பாட்டிலைக் குலுக்கி பார்த்தால் மது தெளிவாக இருக்க வேண்டும். நுரை அதிகமாகவும் நீண்ட நேரம் இருந்தாலும், உள்ளே துகள்கள் இருந்தாலும் அது கள்ள மதுவாக இருக்கலாம்.
QR/பார்கோடு, சீரியல் சோதனை அவசியம்
சட்டப்படி விற்கப்படும் மது பாட்டில்களில் QR அல்லது சீரியல் ஸ்டிக்கர் இருக்கும். ஸ்டிக்கர் இல்லாத பாட்டிலை வாங்கவே கூடாது.
ஆன்லைன் மூலம் உண்மைத் தன்மை சரிபார்க்க
நீங்கள் வாங்கும் பாட்டில்களின் சீரியல் எண்ணை delhiexcise.gov.in/Portal/liquorsalecheck தளத்தில் உள்ளிட்டு சரிபார்க்கலாம். தவறான எண் என வந்தால் அல்லது தகவல் வெளியிடாவிட்டால் அந்த குறிப்பிட்ட பாட்டில் சந்தேகமானது
‘ஆப்’பில் ஸ்கேன் செய்யலாம்
‘mLiquorSaleCheck’ என்னும் ஆண்ட்ராய்டு ‘ஆப்’பின் மூலம் QR/பார்கோடு ஸ்கேன் செய்து உடனே சரிபார்க்கலாம்.
எப்போதும் மது பாட்டில்களை வாங்கும் போது சுவையைக் கவனிக்கும் அளவுக்கு பாதுகாப்பையும் கவனிக்க வேண்டும். லேபிள், மூடி, சீரியல் எண், ஸ்கேன் ஆகியவற்றை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சந்தேகமான பாட்டில் தென்பட்டால் உடனே புகார் செய்யுங்கள். சின்ன தவறே பெரிய ஆபத்தாக மாறி விடலாம். சமயங்களில் அவை உங்கள் உயிருக்கு கூட உலை வைக்கலாம்.
மது அருந்துவது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு. அப்படி உயிரையும் துச்சமென மதித்து அருந்துபவர்கள், போலி தயாரிப்புகளிடம் இருந்தாவது பாதுகாப்பாக இருங்க.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!