கண்ணு முழி பாடல் உண்மையில் அந்த படத்திற்காக பண்ணது- உண்மையை உடைத்த வெற்றிமாறன்!
TV9 Tamil News November 11, 2025 04:48 AM

இயக்குநர் வெற்றிமாறன்(Vetrimaaran) கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் இயக்கத்தில் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. தனுஷின் (Dhanush) பொல்லாதவன் (Pollathavan) என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து அவருடன் பலமுறை பணியாற்றியுள்ளார். அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் இறுதியாக விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2) திரைப்படம் வெளியானது. இந்த படமானது நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து தற்போது சிலம்பரசனின் அரசன் (Arasan) படத்தையும் இயக்கவுள்ளார். படங்களை இயக்குவதை தொடர்ந்து, மற்ற நடிகர்களின் படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் இவரின் தயாரிப்பில் மற்றும் இயக்குநர் விகர்ணன் அசோக் (Vikarnan Ashok) இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் மாஸ்க் (Mask).

இதில் கவின் (Kavin) மற்றும் ஆண்ட்ரியா (Andrea) இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான “கண்ணு முழி காக்கா முல்லை” (Kannu muzhi) என்ற பாடல் ஏற்கனவே பண்ணிவைத்திருந்த பாடல், அதை இந்த மாஸ்க் படத்தில் பயன்படுத்தியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசன் படத்திற்கு தயாரான சிலம்பரசன்.. ரசிகர்களிடையே வைரலாகும் ரீசென்ட் கிளிக்ஸ்!

கவினின் மாஸ்க் பட முதல் சிங்கிள் குறித்து வெற்றிமாறன் பகிர்ந்த விஷயம் :

நேற்று மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்த நிலையில், அதில் வெற்றிமாறன் கலந்துகொண்டிருந்தனர். அதில் அவர், “இந்த மாஸ்க் படத்தின் கதைக்கு என்ன தேவைக்கப்டுகிறது என்பதை பார்ப்போம் என , முதலில் இப்படத்திற்காக ஜிவி.பிரகாஷ் குமாரைதான் மீட் பண்ணினேன், நானும் இப்படத்தின் கதையை அவரிடம் சொன்னேன் மற்றும் இயக்குனர் விகர்ணனும் பேசியிருந்தார். அதன் பிறகு இந்த மாஸ்க் படத்தில் ஜிவி.பிரகாஷ் இணைந்தார். அவர் வந்ததும் முதல் வேலையாக நாங்கள் என்ன பண்ணினோம் என்றால், ஏற்கனவே ஒரு படத்திற்காக உருவாக்கப்பட்டிருந்த பாடலை, தாணு சாரின் அனுமதி கேட்டு இப்படத்தில் பயன்படுத்தியிருந்தேன்.

மாக்ஸ் பட இசைவெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் பேசிய வீடியோ பதிவு :

So Kannumuzhi song was originally composed for #Vaadivaasal, VetriMaaran asked permission from Thanu & used in #MASK movie🎶 pic.twitter.com/bYecCA10WK

— AmuthaBharathi (@CinemaWithAB)

இதையும் படிங்க : ஆக்ஷன் நாயகியாக கீர்த்தி சுரேஷ்.. ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அதுதான் கண்ணு முழி பாடல். மேலும் ஜிவி. பிரகாஷின் இசையமைப்பில் இப்படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள பாடல்கள் அனைத்தும் இப்படத்திற்கு ஏற்றது போலவே இருக்கிறது” என அவர் அதில் வெளிப்படையாக பேசியிருந்தார். அதில் வெற்றிமாறன் மற்றும் கலைப்புலி எஸ் தாணுவிடம் அனுமதி கேட்டதாக கூறியிருந்தார் அது வாடிவாசல் திரைப்படம்தான் என உறுதியாக தெரிகிறது. ஏனென்றால் வெற்றிமாறன், எஸ். தாணு மற்றும் ஜி.வி. பிரகாஷின் கூட்டணியில் அரசன் படத்திற்கு முன் வாடிவாசல் திரைப்படத்தான் உருவாகயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.