கன்னட சினிமாவில்ன் மூலம் கதாநாயகியாக நுழைந்து, தற்போது பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்த்துவருபவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. அந்த வகையில் தற்போது பான் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend). இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நாயகனாக கன்னட நடிகர் தீக்ஷித் ஷெட்டி (Dikshit Shetty) நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த 2025 நவம்பர் 07ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பும் மிகவும் பிரம்மதமாக அமைந்திருந்தது என்றே கூறலாம்.
இந்த படமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்கள் பெற்ற திரையரங்குகளில் சிறப்பாக வெளியாகிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராஷ்மிகா, தனது வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும் என்றும், நடிகர் விஜய் தேவரகொண்டாவை (Vijay Deverakonda) காதலிப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.
இதையும் படிங்க : அனுராக் காஷ்யப் நடிப்பில் Unkill_123 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
அந்த நேர்காணலில் நடிகை ராஷ்மிகா மந்தனா பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு கணவராக வருகிறவர், என்னை பற்றி அனைத்தையும், என் பக்கத்தில் இருந்து தெரிந்துகொள்ளவேண்டும். சூழ்நிலைகளை புரிந்துகொள்ளும்போது நான் ஒருவரை விரும்புகிறேன்.
இதையும் படிங்க: ஆண்ட்ரியா ஒரு அழகான சிலை… வர்ணித்து பேசிய விஜய் சேதுபதி!
உண்மையிலே நல்லவர், எனக்கானவர், நாளை எனக்கு ஒரு போர் நடந்தால் என்னுடன் அல்லது எனக்காக போராடக்கூடிய ஒருவர்தான் எனக்கு தேவை” என அவர் அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். மேலும் தொகுப்பாளர் அவரிடம், “உங்களுடன் நடித்த நடிகர்களில் யாரை டேட் செய்வேற்க? மற்றும் யாரை திருமணம் செய்வீர்கள்?” என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “நான் விஜய் தேவரகொண்டாவை டேட் செய்து, பின் அவரையே திருமணம் செய்துகொள்வேன்” என வெளிப்படையாக அவர் தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ரீசென்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
A post shared by Comrade <3 (@_virosh.cutz_)
சமீபகாலமாக ராஷ்மிகாவிற்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் நிச்சயம் ஆனதாக தகவல்கள் வெளியாகிவந்தது. தற்போது இவர் இவ்வாறு பேசியிருக்கும் நிலையில், இவர்கள் காதலை உறுதி செய்துள்ளது. விரைவில் இவர்கள் திருமணத்தின் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.