பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா (Joy Grisilda), சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது தனக்கு எதிராகப் பல பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தன்னைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக இன்ஸ்டாகிராமில் அறிவித்த ஜாய் கிரிசில்டா, அதன் பிறகு ரங்கராஜ் தங்களை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை மகளிர் ஆணையத்திடம் ஒப்புக் கொண்டதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டார்.
இருப்பினும், ஜாய் கிரிசில்டாவின் இந்தக் கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா மீண்டும் ஒரு புதிய சர்ச்சையைத் தொடங்கியுள்ளார்.
அவர் தற்போது தனக்குப் பிறந்த பிஞ்சுக் குழந்தையின் பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை (ஐடி) உருவாக்கியுள்ளார். ‘ராகா மாதம்பட்டி ரங்கராஜ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த ஐடியில் இருந்து, மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டா சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.