இன்று பல முதியோர் அதிக மன அழுத்த நோயால் பாதிக்க பட்டு தூக்கமின்றி தவிக்கின்றனர் .
நம் பாரம்பரிய வைத்தியத்தின் மூலம் படுத்தவுடன் தூக்கத்தை எப்படி வரவைக்கலாம்ன்னு இந்த பதிவில் பார்ப்போம்
1.பொதுவாக தூக்கமின்மைக்கு ,ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மாட்டுப் பால் இரவில் படுக்கும் முன்பு குடித்தால் சீக்கிரம் தூக்கம் உங்கள் கண்களை தழுவும் .
2.அந்த மாட்டு பாலில் மெலடோனின் மற்றும் ட்ரைப்டோபோஃன் என்ற ஹார்மோன்கள் நிறைய அடங்கியுள்ளதால் தூக்கத்தை வர வைக்கும் .
3.அடுத்து வாழைப்பழம் இயற்கையாகவே இரவில் சிறந்த தூக்கத்தை வரவைக்கும் ஆற்றல் கொண்டது .
3.சில முதியோர்கள் அதிக இரத்த அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிப்பது உண்டு
4.அப்போது அந்த முதியோர் வாழைப்பழங்களை சாப்பிட்டால் எளிதில் தூக்கம் வந்துவிடும்.
5.அது மட்டுமல்லாமல் தண்ணீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து,கொள்ளவும்
6.பின்னர் அந்த சீரகத்துடன் கொஞ்சம் தேன் கலந்து இரவில் குடித்துவர தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.
7.தூக்கமின்மை பிரச்சனை தீர தயிர் ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது
8.தினமும் உணவுடன் தயிரை உட்கொண்டு வந்தால் இரவில் நல்ல உறக்கத்தை பெற்று நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழலாம் .