பொதுவாக முன்பெல்லாம் முதியோருக்குத்தான் தலையில் முடி உதிர்வு இருக்கும் .ஆனால் இப்போது இளம் வயதிலேயே பலருக்கும் முடி உதிர்வு பிரச்சினை உள்ளது .இந்த முடிஉதிர்வுக்கு வெங்காயம் மற்றும் தேன் சிறந்த மருந்து .இந்த கலவை பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.முதலில் வெங்காயத்தை தோலை உரித்து பொடிப்பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுங்கள்.
2. இப்படி சாறு எடுக்க நடுத்தர அளவில் வெங்காயங்களாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.
3.அந்த சாறு எடுத்து தனியாக வைக்கவும் .பின்னர் தேனை அரைக் கப் (1/2) அளவு எடுத்து அதனை வெங்காயச் சாறுடன் கலக்க வேண்டும்.
4.வெங்காயச் சாறுடன் தேன் நன்றாக சேரும் வரை கலக்கி எடுத்து கொள்ளவும்
5.அடுத்து இந்த வெங்காய- தேன் கலவையில் , வாசனை எண்ணெய் 10 துளிகள் சேருங்கள். வாசனை எண்ணெய் எதுவாகவும் இருக்கலாம்.
6.உங்களுக்கு தலையில் பொடுகு இருந்தால் தேயிலை மர எண்ணெய் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய் எடுத்துக் கொள்வது சால சிறந்தது
7.உங்கள் தலையில் வறட்சி அதிகம் என்றால் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.
8.இப்போது இந்த கலவையை நீங்கள் உங்கள் தலை முடிக்கு பயன்படுத்தலாம்.
9.ஒவ்வொரு ஸ்கால்ப்பாக எடுத்து இந்த கலவையை தடவுங்கள்.
10.ஸ்கால்ப்பில் படும்படியே நன்றாக தடவுவது முக்கியம். மீதமுள்ள எண்ணெயை நுனி வரை பூசுங்கள்