டிஜிட்டல் இந்தியா என முழங்கியவர்கள் இப்போது பேப்பர் - பேனாவுன் ஏன் அலைகிறீர்கள்? தேர்தல் ஆணையருக்கு எஸ்.வி. சேகர் கேள்வி!
Dinamaalai November 11, 2025 01:48 PM

சென்னை, நவம்பர் 10: தமிழகத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நடிகர் எஸ்.வி. சேகர் பல கேள்விகளை எழுப்பி, விடை தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனை குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் இந்தியா என்று கூறும் நிலையில், ஏன் இன்னும் பேப்பர், பேனா முறையில் பணிகள் நடக்கின்றன என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், இரு முறை விண்ணப்பங்களை வழங்கினால் 12 கோடியே 72 லட்சம் விண்ணப்பங்கள் பிரிண்ட் செய்ய வேண்டியிருக்கும்; இந்த பணிக்கு எத்தனை பணியாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர், ஒருவர் தினத்தில் எத்தனை பேரை தொடர்பு கொள்வார், சனி–ஞாயிறு வேலை நடைபெறுமா போன்ற விவரங்களை அவர் கேள்வியிட்டுள்ளார்.

அதேபோல், எழுதப்படிக்க முடியாத 50 லட்சம் மக்களின் விண்ணப்பங்களை யார் நிரப்புவார்கள், ஆதார் விவரங்கள் இருந்தும் இரு அட்டைகளை இணைக்காததேன், கடந்த தேர்தலில் வாக்களித்த பட்டியலை வைத்து புதுப்பிக்காததேன் என்று விமர்சித்துள்ளார். மேலும், மரணச் சான்றிதழ், ஆதார் விவரங்களை இணைத்து தானாக பெயர்கள் நீக்கப்படாததையும் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிஜிட்டல் இந்தியா என்று கூறும் அரசு, அனைத்து ஆவணங்களிலும் QR கோடு, பார்கோடு வைத்தும், இவ்விடத்தில் மட்டும் பேப்பர், பேனா முறையில் நடப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். “என் போன்ற சாதாரண குடிமகனின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் நேர்மையான பதில் தரும் என எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, 2024 நவம்பர் 9 முதல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள அர்ச்சனா பட்நாயக், இதுவரை SIR பற்றி நேரடியாக பத்திரிகையாளர்களை சந்திக்காதது அரசியல் தரப்பிலும் பொதுமக்களிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்ற நிலையில், அதிகாரிகள் நேரடியாக விளக்கம் அளிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் தயாரிப்பில் முக்கியமானதாக இருப்பதால், இதற்கான விளக்கங்கள் விரைவில் தரப்படுமா என்பது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.