திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மதுரைக்குச் செல்லும் சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களில் மோதி, முதியவர் ஒருவர் உயிரிழந்த வேதனையான விபத்து நேற்று நடந்தது.
செம்பட்டி பஸ் நிலைய ரவுண்டானாவை கடந்தபின் மதுரை நோக்கிச் சென்ற கார் திடீரென எதிர்திசை வழியே அதிவேகமாக பாய்ந்தது. இதனால் எதிரே வந்த இரண்டு கார்கள் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆறு இரு சக்கர வாகனங்களையும் மிக வேகமாக மிதித்துக் கொண்டே சென்றது.
அப்பொழுது மருந்துக்கடையில் மருந்து வாங்கி விட்டு சாலையோரம் நடந்து கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 60 வயது முதியவரை அந்த கார் அதீத வேகத்தில் மோதி, சுமார் 30 அடி தூரம் இழுத்துச் சென்றது. கடுமையாக காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்தை பார்த்து அப்பகுதி மக்கள் பதற்றத்தில் அடித்து ஓடிய நிலையில், கார் ஓட்டுநரை பொதுமக்களே மடக்கிப்பிடித்து செம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பழைய செம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் (27) என்ற இளைஞர் போதையில் கார் ஓட்டியதாக தெரியவந்தது.

ரஞ்சித் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் தப்பிய நிலையில், அவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். அதிவேகமும், போதையில் வாகனம் ஓட்டுவதும் உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!