டெல்லி கார் வெடிப்பு பரபரப்பு... சாந்தினி சௌக் முழுவதுமாக மூடப்படுகிறது!
Dinamaalai November 11, 2025 04:48 PM

ட்எல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தால் தலைநகர் முழுவதும் பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில், அச்சம் காரணமாக சாந்தினி சௌக் சந்தை இன்று மூடப்படும் என அச்சந்தை வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து சாந்தினி சௌக் வணிகர் சங்கத் தலைவர் சஞ்சய் பார்கவ் கூறுகையில், “கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு வணிகர்களில் பெரும் பயம் நிலவுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று சந்தை முழுவதும் மூடப்படும். வெடிப்பு சத்தம் மிகுந்ததால் கட்டிடங்கள் அதிர்ந்தன; மக்கள் பீதி அடைந்து ஓடினர்” என்றார்.

பெருமளவில் உள்ளூர் மக்களும், வியாபாரிகளும், சுற்றுலா வருபவர்களுமாக குவியும் முக்கிய வர்த்தக மையமான சாந்தினி சௌக், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஒருநாள் மூடப்படுவது வர்த்தகர்களிடையே கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளில்லா வாகனங்கள் உள்ளிட்ட சந்தேகப் பொருட்களை கவனமாக கண்காணிக்க தேவையென வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள உள் வட்ட வாகன நிறுத்துமிடங்களில் கைவிடப்பட்ட வாகனங்கள், சட்டவிரோத பொருள் சேமிப்புகள் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளன.

புதிய டெல்லி வர்த்தகர் சங்கத் தலைவர் அதுல் பார்கவ் கூறுகையில், “பார்க்கிங் இடங்கள் வியாபாரிகளின் சேமிப்புக் கிடங்குகளாக பயன்படுகின்றன. பாதசாரிகள் செல்லும் பாதைகள் கூட ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவசர நேரங்களில் மக்கள் பாதுகாப்பாக நகர முடியாத அபாய நிலை உருவாகியுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசும், என்டிஎம்சி அதிகாரிகளையும் கேட்டுள்ளோம்” என்றார்.

இந்நிலையில், வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தலைநகரின் முக்கிய வணிக மையங்கள், சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு கடுமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.