தாய், தம்பியை கொலை செய்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்த அண்ணன்
Top Tamil News November 11, 2025 06:48 PM

ஆந்திராவில் தாய், தம்பியை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் நகரில் ரெஸ்ட் ஹவுஸ் சாலையில்  குணுபுதி ஸ்ரீராமுலு -  மகாலட்சுமி தம்பதிக்கு  இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் திருமணமாகி பெங்களூரில் வசிக்கிறார். கொரோனா தொற்றுநோய் காலத்தில் ஸ்ரீராமுலு இறந்த பிறகு மகாலட்சுமி (60), மகன்கள் ஸ்ரீனிவாஸ் (37) மற்றும் ரவி தேஜா (33) ஆகியோர் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களின் பைனான்ஸ்  தொழில் பாதிக்கப்பட்டதால் தற்போது, அவர்கள் தங்களது வீட்டுடன் சேர்த்துள்ள கடைகளிலிருந்தும், வீட்டின் வாடகைகளிலிருந்தும் குடும்பம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில், ஸ்ரீனிவாஸ் நடத்தை மாற்றம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுவதால்  வீட்டை விட்டு வெளியே வராவிடாமல் தாயும், தம்பியும் தடுத்து வைத்திருந்தனர். 

இந்த சூழலில், திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில், ஸ்ரீனிவாஸ் தனது தாய் மகாலட்சுமி மற்றும் தம்பி ரவி தேஜாவை கத்தியால் பல இடங்களில்  குத்தி கொலை செய்தார். பின்னர் அதிகாலை 4 மணியளவில், ஸ்ரீனிவாஸ் 112 என்ற போலீஸ்  எண்ணை அழைத்து, தனது தாயையும் சகோதரனையும் கொன்றதாகவும், அவரது வீடு  குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாகவும் கூறினார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, ரவி தேஜா மற்றும் மகாலட்சுமி இரத்த வெள்ளத்தில் இறந்து இருப்பதை  கண்டனர். அவர்கள் இருவர்   உடலிலும் 20க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். முன்னதாக போலீசார்  வருவதற்கு முன்பே ஸ்ரீனிவாஸ் முதல் மாடியில் இருந்து கீழே வந்து சாலையில் கத்தியுடன் இருந்தபோது, போலீசார் அவரைக் கைது செய்தனர். உறவினர்கள் யாரும் பதிலளிக்காததால், பெங்களூரில் வசிக்கும் அவர்களின் மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்தை எஸ்பி  நயீம் அஸ்மி, டிஎஸ்பி  ஜெயசூர்யா மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜு ஆகியோர் ஆய்வு செய்தனர். ஸ்ரீனிவாஸ் மனநிலை சரியில்லாத நிலையில், கொலைகளைச் செய்தார் என்று உறுதி செய்யப்பட்டதாக எஸ்பி தெரிவித்தார். முழு விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.

இரண்டு கொலைகளுக்குப் பிறகு ஸ்ரீனிவாஸ் பேசிய வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனது தாயையும் சகோதரனையும் கத்தியால் குத்திக் கொன்ற  ஸ்ரீனிவாஸ், போலீசாரிடம் பேசுகையில்  தனது தாய்  மகாலட்சுமி மற்றும் சகோதரர்  ரவி தேஜாவை தானே கொலை செய்ததாகவும், அவர்கள் இறந்த பிறகும், அவர்கள் பேய்களாக மாறி என்னைத் துன்புறுத்துவதாகவும் கூறினார். நான்  என்ன செய்தாலும் என் அம்மாவும் தம்பியும் முன்கூட்டியே தெரிந்து கொள்வார்கள். அவர்கள் மனிதர்கள் அல்ல. அவர்கள் பேய்கள். அதனால்தான் நான் அவர்களைக் கொன்றேன் என்று  ஸ்ரீனிவாஸ் போலீசாரிடம் கூறினார். அவர்கள் பேய்கள். அவர்கள் 18 வருடங்களாக என்னைத் துன்புறுத்தி வருகிறார்கள். அதனால்தான் நான் அவர்களைக் கொன்றேன்..  ஸ்ரீனிவாஸ் கூறியதை வைத்து அவரது மனநிலையைப் பாதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.