டெல்லி செங்கோட்டை அருகே மாலை 6.52 மணியளவில் கார் குண்டு வெடித்து 13 பேர் உயிரிழந்தனர், மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். வெடிப்பு காரணமாக அருகிலிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன, சுற்றுப்புறம் பரபரப்பான காட்சியாக மாறி மக்கள் உயிர் தப்பிக்க ஓடினர். வெடிப்பு சக்திவாய்ந்ததாக இருந்ததால் அருகிலிருந்த கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்தன, சில கிலோமீட்டர் தொலைவில் வெடிப்பு சத்தம் கேட்டது.
View this post on InstagramA post shared by Patrikai (@patrikai_com)
முதற்கட்ட விசாரணையில் காரில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்திருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துக்கு உடனடியாக தேசிய புலனாய்வு அமைப்பு, தேசிய பாதுகாப்பு படை, டெல்லி போலீஸ் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்தனர். காயமடைந்தவர்கள் விரைவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டு, முக்கிய நகரங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உயர் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை; விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!