வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் (SIR) பணியை நிறுத்த வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. பருவமழை, அறுவடை காலம், பொங்கல் போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி திமுக சார்பில் தடையுத்தரவு கோரப்பட்டிருந்தது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், *தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் SIR பணிக்கு தடையில்லை* என தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலங்களில் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகள் வழக்கம்போல தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து மனுக்களும் இணைத்து விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை அடுத்த 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவால், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடரும் நிலையில், இந்த தீர்ப்பு அரசியல் சூழலை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!