உலகளவில் குழந்தைகள் சமூக ஊடகங்களின் தீமையான தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியா முக்கிய முடிவை அறிவித்துள்ளது. அந்த நாட்டில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடக கணக்குகளை உருவாக்கவோ, பயன்படுத்தவோ தடை செய்யும் சட்டம் அமலில் வருகிறது.
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் முன்பு, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட் போன்ற மொத்த சமூக வலைத்தளங்களும் குழந்தைகளின் மனநலம் மற்றும் உடல் நலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக எச்சரித்திருந்தார். இந்தக் கருத்துடன் எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் படி, வரும் டிசம்பர் 10 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் எந்த சமூக ஊடக பிளாட்ஃபார்மும் பயன்படுத்த முடியாது. மீறல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடுமையான அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியமும் இதேபோன்ற தடையை பரிசீலித்து வரும் நிலையில், டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.குழந்தைகள் ஆன்லைன் உலகின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான இந்த முடிவு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!