டெல்லியின் வரலாற்று சிறப்பு மிக்க ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், நவீன வடிவில் மறுபிறவி எடுக்க உள்ளது. 1982-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிக்காக கட்டப்பட்ட இந்த மைதானம், 60000 பேரை அமரவைக்கும் திறனுடன் பல சர்வதேச தடகள, கால்பந்து போட்டிகளுக்குப் புகழ் பெற்றது. 1984 மற்றும் 1991-ல் கிரிக்கெட் போட்டிகளும் இங்கு நடைபெற்றிருந்தன.

பின்னர் கிரிக்கெட்டுக்கு பொருத்தமற்றதாக கருதப்பட்ட இந்த மைதானம், 2010 காமன்வெல்த் போட்டிக்காக ரூ.900 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. சமீபத்தில் உலக பாரா தடகள போட்டியும் இங்கே நடந்தது. ஆனால் இப்போது, காலத்தின் தேவைக்கேற்ப முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

102 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானம் இடிக்கப்பட்டு, அதன் இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய “விளையாட்டு நகரம்” அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடகளம் முதல் சர்வதேச அளவிலான அனைத்து விளையாட்டுகளும் நடத்தக்கூடிய வகையில் வடிவமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டெல்லியின் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயமாகும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!