அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகன சார்ஜிங் கட்டாயம்!
Dinamaalai November 11, 2025 08:48 PM

நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் செலவை குறைக்கும் நோக்கில் மக்கள் மின்சார கார்கள், இருசக்கர வாகனங்களை பெருமளவில் வாங்கி வருகின்றனர். தற்போது பஸ்கள் கூட மின்சாரத்தால் இயக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதால், ஆரம்பத்தில் சில நிறுவனங்கள் பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைத்தன. ஆனால், இதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால் குழப்பங்கள் ஏற்பட்டன. இதைத் தீர்க்க, அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகன சார்ஜிங் வசதியை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு பொது கட்டட விதிகளில் திருத்தம் செய்து, எட்டு வீடுகள் அல்லது 8,072 சதுர அடிக்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என அறிவித்துள்ளது. மேலும், 50 வீடுகளுக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் வெளிநாட்டில் இருந்து வரும் வாகனங்களுக்காக விரைவு சார்ஜிங் வசதியும் அமைக்கப்பட வேண்டும். தொழில் மற்றும் வணிக கட்டடங்களில் 3,229 சதுர அடிக்கு மேற்பட்ட இடங்களில் வாகன நிறுத்துமிடத்தின் 10 சதவீதம் சார்ஜிங் வசதிக்காக ஒதுக்கப்பட வேண்டும் எனவும் புதிய விதி கூறுகிறது. இந்த மாற்றங்கள் தற்போது தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.