Heart Attack: 40% மாரடைப்பை குறைக்கும் நடைமுறை.. தினமும் சாப்பிட்டு இதை செய்தால் போதும்!
TV9 Tamil News November 11, 2025 07:48 PM

2021ம் ஆண்டில் இந்தியாவில் இருதய நோயால் (Heart Disease) மொத்தம் 2,873,266 இறப்புகள் ஏற்பட்டதாக உலக இதய கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த 2021 மற்றும் 2023ம் ஆண்டுக்கு இடையில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 3ல் ஒரு பங்கு மாரடைப்பு பிரச்சனையால் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, மாரடைப்பு (Heart Attack) அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் வகையில் சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வது அவசியமானது. அந்தவகையில்,மாரடைப்பு அபாயத்தை குறைக்கக்கூடிய ஒரு எளிய முறையை தெரிந்து கொள்வோம். இதை பின்பற்றுவதன்மூலம், இதய ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்வதற்கான வழியை உண்டாக்கலாம்.

உணவுக்கு பிறகு நடப்பது மாரடைப்பு அபாயத்தை 40 சதவீதம் குறைக்கும். மேலும், இது சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் இதய ஆபத்து பிரச்சனைக்கும் பயனளிக்கும்.

ALSO READ: மாரடைப்பின் முதல் அறிகுறி இதுதானா..? உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது!

மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்யலாம்..?

இதய பிரச்சனைகளை தடுக்கவும், மாரடைப்பு அபாயத்தை குறைக்கவும் உதவும் ஒரு பழக்கம் தினசரி நடைப்பயிற்சி ஆகும். இதற்கு நீங்கள் அதிகம் செய்ய வேண்டியதில்லை. அதன்படி, காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு பிறகு 15 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இந்த எளிய பழக்கம் மாரடைப்பு அபாயத்தை 40 சதவீதம் வரை குறைக்கும்.

இந்த பழக்கம் ஏன் பயனுள்ளதாக இருக்கும்..?

நீங்கள் எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் சாப்பிட்ட பிறகு, உங்கள் இரத்த சர்க்கரை அதிகரிக்கும். இது பொதுவாக உடல் கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக உடைக்கும்போது இது நிகழ்கிறது. இருப்பினும், இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உயர்ந்தால், அது வீக்கத்திற்கு வழிவகுக்கும். அப்படி இல்லையென்றால், இரத்த நாளங்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரிக்கும். இது இரத்த நாளங்களின் புறணியை சேதப்படுத்தி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. சாப்பிட்ட பிறகு 15 நிமிட நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்கும், வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ALSO READ: இந்தியாவில் அச்சுறுத்தும் மாரடைப்பு.. இந்த 4 பழக்கவழக்கங்களே அதிகரிக்க முக்கிய காரணம்!

நடைபயிற்சியால் ஏற்படும் பல நன்மைகள்:
  • நடப்பதன் மூலம், கொழுப்புகள் விரைவாக உடைந்து, இரத்த நாளங்களில் பிளேக் சேராது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
  • தினமும் நடப்பதன்மூலம் இரத்த நாளங்கள் திறக்கும், இரத்த அழுத்தம் குறைந்து இரத்த நாளங்களில் அழுத்தம் குறைகிறது.
  • நடப்பது இதயத்திற்கு மட்டுமல்ல, உணவு சாப்பிட்ட பிறகு நடப்பது உங்கள் செரிமானத்திற்கும் நன்மை பயக்கும்.
  • நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலில் இருந்து அழுக்கு நச்சுகள் வெளியேற உதவி செய்கிறது.
  • சிறிது நேரம் நடப்பது ஒரே அறையில் முடங்கி கிடப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து மனநிலையும் நன்றாகும்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.