இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணியுடன் நசீம் ஷா இணைந்துள்ள நிலையில், நேற்று (நவம்பர் 10) அவரது சொந்த ஊரான லோயர் டிரி பகுதியில் உள்ள குடும்ப வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

வீட்டின் வாசலில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தாக்குதல் நடந்த நேரத்தில் வீட்டில் யார் இருந்தார்கள், தாக்குதலுக்கான நோக்கம் என்ன என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்தச் சம்பவம் நடந்த போதிலும், முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹாரிஸ் ரவுஃப், ஷாஹீன் அப்ரிடி ஆகியோருடன் இணைந்து நசீம் ஷா, இன்று (நவம்பர் 11) தொடங்கும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக அணியுடன் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.