தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தற்போது 5 வாரங்கள் முடிவடைந்து 6-வது வாரத்தில் சென்று கொண்டிருக்கின்றது 20 போட்டியாளர்கள் மற்றும் 4 வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் என மொத்தம் 24 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் தற்போது 7 பேர் வெளியேறிய பிறகு 17 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான வீட்டு தல போட்டி நேற்று நடைப்பெற்றது. இதில் திவ்யா கணேஷ், பார்வதி மற்றும் சபரி ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். அதில் சபரி வெற்றிப்பெற்று இந்த வாரத்திற்கான வீட்டு தலையாக தேர்வாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைப்பெற்றது. அதில் திவ்யா, சாண்ட்ரா, பார்வதி, கனி திரு, சுபிக்ஷா, வியானா, திவாகர், விக்ரம், அரோரா மற்றும் ரம்யா ஜோ ஆகிய 10 பேர் இந்த வாரத்திற்கான எவிக்ஷனுக்காக நாமினேட் ஆகியுள்ளனர். இவர்களில் யார் இந்த வார இறுதியில் வெளியேறுவார்கள் என்பது குறித்து பொருத்து இருந்து பார்க்கலாம்.
இரண்டு சாம்ராஜ்யங்களாக பிரிந்து போட்டி போடும் போட்டியாளர்கள்:இந்த நிலையில் இந்த 6-வது வாரம் பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இரண்டு சாம்ராஜ்யங்களாம பிரிந்துள்ளது. அதன்படி கானா வினோத் தலைமையில் கானா சாம்ராஜ்யம் என்றும் திவாகர் தலைமையில் தர்பீஸ் சாம்ராஜ்யம் என இரண்டு சாம்ராஜ்யங்களாக பிரிந்து போட்டிப்போடுகின்றனர். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த வாரம் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் படத்தின் டைட்டில் இதுதான் – அப்டேட் இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:#Day37 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/ejVkjlcvfZ
— Vijay Television (@vijaytelevision)
Also Read… பிக்பாஸில் வீட்டு தல டாஸ்கின் போது காயமடைந்த பார்வதி – வைரலாகும் வீடியோ!