தில்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை நிறுத்தப்பட்டிருந்த ஹுண்டாய் ஐ–20 கார் திடீரென வெடித்துச் சிதறி 12 பேர் உயிரிழந்தனர். பலர் தீக்காயங்களுடன் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், முகமது உமர் என்ற மருத்துவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து டெட்டனேட்டர் பொருத்தி காரை வெடிக்கச் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளையில், புலனாய்வு அமைப்புகள் சம்பவ இடத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், “பயங்கரவாதிகள் தில்லியைக் குறிவைத்து நீண்டகாலமாக சதித் திட்டம் தீட்டியிருந்தனர். இன்று அவர்கள் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பழிவாங்கும் முயற்சிதான் இது” என மத்திய அமைச்சர் ஜிதன் ராம் கூறியதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்தக் கருத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் “முன்னெச்சரிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்விகள் எழுந்துள்ளன. இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர் அதிகாரிகள் அவசரக் கூட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!