திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில், நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ரூ.5 முதல் 7 லட்சம் வரை விற்பனை நடைபெறும் அந்தக் கடையில் 6 விற்பனையாளர்களும் 3 மேற்பார்வையாளர்களும் பணியாற்றி வந்தனர்.
நேற்றிரவு கடை மூடப்பட்ட பிறகு, மர்ம நபர்கள் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, இரும்பு ஷட்டரைப் பெயர்த்து உள்ளே நுழைந்தனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தி, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்களையும், ரூ.15 ஆயிரம் பணத்தையும் பறித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தெரிய வந்ததும், ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு மதுபானக் கடையில் நடந்த இந்த கொள்ளை, மின்னூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!