நேற்று ஒரே நாள் தான் ஏற்றம்.. இன்று மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!
Webdunia Tamil November 11, 2025 03:48 PM

இந்திய பங்குச்சந்தை நேற்று ஒரே ஒரு நாள் மட்டும் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிவில் இருந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை உயர்ந்ததால் இந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 280 புள்ளிகள் குறைந்து 83,265 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 80 புள்ளிகள் குறைந்து 25,504 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்டிகோ, இன்ஃபோசிஸ், ஐடிசி, சன் பார்மா, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகளின் விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஜியோ பைனான்ஸ், மாருதி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா உள்ளிட்ட பங்குகளின் விலைகள் குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.