#BIG BREAKING : என் கணவர் நடிகர் தர்மேந்திரா நலமாக இருக்கிறார்.. மரணசெய்தியை மறுத்த மனைவி ஹேமமாலினி..!
Top Tamil News November 11, 2025 05:48 PM

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலையில் மரணடைந்ததாக தகவல்கள் வெளியாகின. மூச்சுத்திணறலுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அது பலனளிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அதனை மனைவி ஹேமமாலினி முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛நடந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாததாக இருக்கிறது. சிகிச்சையின் குணமடைந்து வரும் ஒருவரை பற்றி சேனல்கள் எப்படி தவறான செய்தியை பரப்ப முடியும்? இது மிகவும் பொறுப்பற்ற செயல். அவமரியாதைக்கானது. தயவு செய்து குடும்பத்திற்கும், அவர்களின் பர்ஷனல் விஷயத்துக்கும் மரியாதை கொடுங்கள்'' என்று கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோலும் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் தந்தை நலமுடன் உள்ளார். குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.