பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருப்பூர் பி.வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி கைது செய்யப்பட்டார்.
பல்லடம் அருகே கரடிவாவி, காந்தி நகர் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணசாமி (33) என்பவர் தொழிலாளி. அவரது மாமனார் செல்வராஜ் பெயரில் வடுகபாளையம் அருகே அறிவொளிபுதூர் பகுதியில் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் பட்டாவில் மாமனார் பெயர் இணைக்க கிருஷ்ணசாமி, பி.வடுகபாளையம் விஏஓ முத்துலட்சுமியிடம் விண்ணப்பித்தார்.

இந்த பணிக்காக முத்துலட்சுமி முதலில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆரம்பமாக ரூ.10 ஆயிரம் அவர் வசம் ஏற்கெனவே கொடுத்ததாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மீதமுள்ள ரூ.20 ஆயிரம் கேட்கப்பட்டதால், கிருஷ்ணசாமி திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் போலீஸார் முன்கூட்டியே குறிக்கப்பட்ட நாணய நோட்டுகளுக்கு ரசாயனம் தடவி, கிருஷ்ணசாமி மூலம் முத்துலட்சுமிக்கு வீட்டிலேயே கொடுக்க ஏற்பாடு செய்தனர். லஞ்சத் தொகையை பெற்ற உடனே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் முத்துலட்சுமியை பிடித்து கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!