பொதுவாக இந்த டிஜிட்டல் யுகத்தில் பலரும் இன்டர்நெட்டுக்கு அடிமையாகி எந்நேரமும் செல்போனை நோண்டிக்கொண்டே இருக்கின்றனர் .இதனால் சிறிது நேரம் செல்போனை பார்க்க வில்லையென்றாலும் ஒரு பதட்டம் வந்து விடுகிறது .
இந்த இணையத்திற்கு அடிமையாவதால் உண்டாகும் மன இறுக்கத்தின் சில முக்கிய அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.இன்டர்நெட் மன அழுத்தம் உள்ளவர்கள் நிஜ உலகத் தொடர்புகளில் இருந்து விலகுவார்கள்
2.இன்டர்நெட் மன அழுத்தம் உள்ளவர்கள் உள்நோக்கமுள்ளவர்களாக இருப்பார்கள்
3.இன்டர்நெட் மன அழுத்தம் உள்ளவர்கள் பிறருடன் பேசுவது பழகுவதில் மாற்றம் இருக்கும்
4.இன்டர்நெட் மன அழுத்தம் உள்ளவர்கள் தனிமையை நாடுவார்கள்
5.இன்டர்நெட் மன அழுத்தம் உள்ளவர்கள் பணியில் ஆர்வம் இல்லாமல் போவது
6.இன்டர்நெட் மன அழுத்தம் உள்ளவர்கள் பள்ளி மற்றும் பணிபுரியும் இடத்தில் சிறப்பாகச் செயல்படாமல் போவது
7.இன்டர்நெட் மன அழுத்தம் உள்ளவர்கள் கோபம் அல்லது தற்காப்பு ஆளுமை வளர்ச்சியுடன் இருப்பர்
8.இன்டர்நெட் மன அழுத்தம் உள்ளவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளுக்கு விருப்பங்களும் கருத்துகளும் வந்துள்ளதா என்று எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
9.இன்டர்நெட் மன அழுத்தம் உள்ளவர்கள் இணையத்தை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிவதைத் தவிர்ப்பதற்காக இரகசியமாக செயல்படுவார்கள்