பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரவீன் ராஜ் தேவசகாயத்தை அவரது குடும்பத்தினர் எளிமையான முறையில் அன்புடன் வரவேற்றனர். பிற போட்டியாளர்கள் வீட்டிற்கு திரும்பியபோது நடந்த ஆரவார வரவேற்புகளைப் போல அல்லாமல், பிரவீனின் வீடு திரும்பல் அமைதியான, உணர்ச்சி மிகுந்த தருணமாக இருந்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

விஜய் டிவியில் தொடங்கிய தனது பயணத்தை நடிப்புத் துறைக்கு மாற்றிய பிரவீன், பிக் பாஸ் வீட்டில் தனது நேர்மையான நடத்தையால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். ஆனால் எதிர்பாராத வகையில் ஐந்தாவது வாரத்தில் குறைந்த வாக்குகள் காரணமாக வெளியேறினார். அவரது வெளியேற்றம் போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
போட்டி முடிந்து வீடு திரும்பிய பிரவீனுக்கு தாயார் மற்றும் மனைவி ஆரத்தி எடுத்து, பூக்களைத் தூவி வரவேற்றனர். மகன் மாலை அணிவித்து தந்தையை கட்டியணைத்தான். குடும்பத்தினரின் அன்பான வரவேற்பை கண்ட பிரவீன் கண்கலங்கியுள்ளார். எளிமையிலும் உண்மையிலும் நிறைந்த இந்தக் காட்சி, இணையத்தில் பலரின் மனத்தையும் தொட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!