இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை (ICC Womens World Cup 2025) வென்றது. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த 2005 மற்றும் 2017ம் ஆண்டுகளில் மிதாலி ராஜின் தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியது. ஆனால், உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. நீண்ட ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, இறுதியாக கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் நம்பிக்கையுடன் வரலாறு படைத்தது. இந்திய மகளிர் அணியின் (Indian Womens Cricket Team) பயிற்சியாளர் அமோல் மஜும்தாரின் உத்தி உலகக் கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது. இதன்மூலம், இந்திய மகளிர் அணி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தனர்.
இந்திய மகளிர் அணிக்கு அதிர்ஷ்டம்:இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ. 51 கோடி ரொக்க பரிசை அறிவித்தது. இதுமட்டுமின்றி, இந்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமிருந்து சுமார் ரூ. 50 கோடியையும் பரிசுத்தொகையாக பெற்றது. தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், ஸ்ரீ சரணி, ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் பிற வீராங்கனைகளுக்கு அவர்களது சொந்த மாநில அரசுகள் தனிப்பட்ட ரொக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கின.
ALSO READ: மகளிர் உலகக் கோப்பையில் இனி 10 அணிகள்.. எண்ணிக்கையை அதிகரித்த ஐசிசி!
மிகப்பெரிய மரியாதை:A word of caution from Sunil Gavaskar to the World Cup-winning India team! 👀#CricketTwitter pic.twitter.com/uAnJqJ6cTc
— Female Cricket (@imfemalecricket)
இந்தநிலையில், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் இந்திய மகளிர் அணிக்கு சிறப்பு அறிவுரை ஒன்றை வழங்கினார். அதில், “பெண்களுக்கு ஒரு சிறிய அறிவுரை. சில வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என்றால் சோர்வடைய வேண்டாம். இந்தியாவில் பல விளம்பர நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் தனிநபர்கள் வெற்றிக்கு பிறகு, உடனடியாக அணியின் பெயரை பயன்படுத்தி தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள். செய்தித்தாள்களிலும், அணியை வாழ்த்தி விளம்பர பலகைகளிலும் வரும் பெரிய விளம்பரங்களை பாருங்கள். விளம்பர நிறுவனங்கள் அணியின் அல்லது வீரர்களின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்களாக இல்லாவிட்டால், அவர்கள் தங்கள் சொந்த பிராண்டை விளம்பரப்படுத்த முயற்சிக்கிறார்கள். ” என்றார்.
ALSO READ: சச்சின் சொன்ன இந்த ஒரு வார்த்தை! உலகக் கோப்பையை வெல்ல காரணம்.. ரகசியம் உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
தொடர்ந்து 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை நினைவுகூர்ந்த சுனில் கவாஸ்கர், “எங்கள் 1983ல் இந்திய அனிக்கும் இதேதான் நடந்தது. அப்போது, ஊடகங்களில் நிறைய வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகள் வந்தன. ஆனால், அவற்றில் எதுவும் எங்களுக்கு நிறைவேற்றப்படவில்லை. அது ஊடகங்களின் தவறு அல்ல, சிலர் தங்களை பெருமைப்படுத்த அவற்றை பயன்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் உணரவில்லை. எனவே, பெண்களே சிலர் இன்னும் உங்கள் வெற்றியை தங்கள் சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தினால், கவலைப்பட வேண்டாம். இத்தனை வருடங்களுக்கு பிறகும், 1983 அணி இன்னும் தங்கள் மிகப்பெரிய செல்வம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அன்பும் மரியாதையும் என்று கூறுகிறது. உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவை நீங்கள் திரும்பி பார்க்கும்போது இந்த அன்பு உங்கள் மிகப்பெரிய சொத்தாக மாறும். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். முழு தேசமும் உங்களை பற்றி பெருமை கொள்கிறது. ஜெய் ஹிந்த்” என்றார்.