Bigg boss 9 tamil : அவள முதல்ல தூக்குவோம்.. அடுத்த எலிமினேஷன் இப்படி தான் இருக்க போகுது.. திவ்யா, பிரஜினுடன் சேர்ந்து சாண்ட்ரா போட்ட மாஸ்டர் பிளான்..
Tamil Minutes November 11, 2025 03:48 AM

பிக் பாஸ் வீடு என்றாலே போட்டியாளர்கள் தங்களின் திறனை வளர்த்தி கொள்ளவும், தங்களது கருத்துக்களில் மிக வலுவாக நிற்கவும், அதே வேளையில் பிரச்சனை என வரும் போது ஒன்றாக நிற்கவும் தான். ஆனால் நடப்பு சீசனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், பலரும் வீட்டிற்குள் வலம் வந்த வண்ணம் உள்ளனர். அது மட்டுமில்லாமல், இன்னமும் தங்களது ஆட்டத்தை ஆட தொடங்காமல் இருக்கும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க, பிரவீன் ராஜ், துஷார், ஆதிரை உள்ளிட்டோர் வெளியேறியது தவறான முடிவு என்ற விமர்சனமும் எழுந்திருந்தது.

பார்வதியும் கூட பிரவீன் ராஜ் வெளியேறிய பின்னர் அது பற்றி சுபிக்ஷாவிடம் பேசும் போது, ‘தகுதியான ஆளுங்கள வெளிய அனுப்பிட்டு தகுதியே இல்லாதவங்க உள்ள இருக்காங்க‘ என கூறியிருந்தார். பார்வதி சொன்னது போலவே எந்த இடத்திலும் துணிச்சலாக பேச தெரியாமல், மற்றவர்களின் போர்வையில் ஒளிந்து பாதுகாப்பாக ஆடி வருபவர்கள் பலரும் உள்ளே இருக்கின்றனர்.

அந்த கேங்கை உடைக்கணும்..

அதிலும் கனி தலைமையில் FJ, சபரி, விக்ரம், ரம்யா, கெமி உள்ளிட்டோர் மாறி மாறி ஆதரவு சொல்லி நாமினேஷனில் கூட வராத அளவுக்கு மிக Safe ஆகவும் ஆடி வருகின்றனர். மேலும் ஒரு சிலரை மட்டுமே நாமினேஷனில் தேர்வும் செய்கின்றனர். இதனிடையே, Wild Card போட்டியாளர்களாக உள்ளே நுழைந்த திவ்யா, சாண்ட்ரா மற்றும் ப்ரஜின் ஆகியோர் சமீபத்தில் நாமினேஷன் பற்றி கலந்துரையாடினர்.

நாமினேஷனில் யாரை தேர்வு செய்வது என்பது பற்றி சாண்ட்ரா, பிரஜின் மற்றும் திவ்யா ஆகியோர் ஒன்றாக அமர்ந்து விவாதிக்கின்றனர். அப்போது பேசும் சாண்ட்ரா, ‘இந்த கேங்க நம்ம பிரிச்சு விட்டுருவோம்’ என கனி, கெமி, FJ, சபரி, ரம்யா க்ரூப்பை பற்றி பேசும் சாண்ட்ரா, தொடர்ந்து பேசுகையில், ‘ரம்யாவ நான் கவனமா பாத்துட்டு இருக்கேன். என்னை விஷ பாட்டில்ன்னு சொல்றா. அப்போ உன் மனசுல அவ்ளோ வெச்சுட்டு தானே பழகுறே. அவ கண்டிப்பா வெளிய போகணும்.

விக்ரம், சபரி, கனி, FJ, ரம்யா, சுபிக்ஷானு ஆறு பேர் ஒண்ணா இருக்காங்க. இந்த க்ரூப்ல இருந்து ஒவ்வொரு ஆளா நாம தூக்கணும். பிரவீன் மாதிரி அடுத்த வாரமே ஒருத்தர் போகமாட்டாங்கன்னு என்ன நிச்சயம். அப்படி தான் நாம தூக்கணும்‘ என நாமினேஷன் பற்றி திவ்யா மற்றும் பிரஜின் ஆகியோரிடம் சொல்கிறார் சாண்ட்ரா.

சாண்ட்ரா பேச்சு கரெக்ட்டா?..

நாமினேஷன் என்பது தனிப்பட்ட முறையில் இரண்டு பேரை தேர்வு செய்வது தான். ஆனால் இப்படி 3 பேர் இணைந்து எப்படி ஒரு க்ரூப்பை உடைத்து ஒவ்வொரு ஆளாக வெளியேற்றலாம் என்பது பற்றி உரையாடுவது தவறு என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால், அதே நேரத்தில் பிரவீன் ராஜை விட சுமாரான போட்டியாளராக இருக்கும் ரம்யா, கெமி உள்ளிட்டோர் க்ரூப்பிசம் மூலம் தான் இன்னும் வீட்டிற்குள் இருக்கின்றனர் என பலரும் குறிப்பிட்டு வரும் சூழலில் அப்படிப்பட்டவர்களை அனுப்ப இந்த திட்டம் நிச்சயம் சிறந்த ஒன்று தான் என சாண்ட்ராவின் பேச்சை பலரும் ஆதரித்தும் வருகின்றனர்.

ரம்யா, கனி, விக்ரம் என பலரும் நாமினேஷனில் இருக்க அடுத்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்பதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ajith V

நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

Author: Ajith V

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.