பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் ஊழியர் அரிவாளால் வெட்டி கொலை!
Dinamaalai November 11, 2025 02:48 AM

 

திருச்சி பீமநகர் கீழத்தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (24), தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று காலை வேலைக்கு செல்லும்போது, மார்சிங்பேட்டை பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து தாமரைச்செல்வனின் பைக்கை மோதியது. திடீரென தாக்கிய கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டியது. உயிர் தப்பிக்க அவர் அருகிலிருந்த காவலர் குடியிருப்புக்குள் ஓடினாராம், ஆனால் அங்கேயே சமையலறையில் நுழைந்த கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி வடக்கு துணை ஆணையர் சிபின், மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். கொலைச் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் விசாரணையில், தாமரைச்செல்வனுக்கும் சதீஷ் என்ற நபருக்கும் முன்பு ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணம் என தெரியவந்தது. பழிவாங்கும் நோக்கில் சதீஷ், பிரகாகரன், நந்து, கணேசன் உள்ளிட்ட ஐவர் கொலைக்குத் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. போலீசார் வேகமாக விசாரணை நடத்தி சில மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.